Saturday, 7 July 2012

தொடரும்...


நீ என்னை விட்டு செல்லும் போதும்
என்னை மட்டுமே வைத்திருந்தாய் மனதில்..
ஆனால் அன்று பெரிதாக தெரியவில்லை 
நீ கூறிய வார்த்தைகள்
உன்னை நான் பார்ப்பது 
கல்லறையில் என்று ஒரு நாளும் 
நினைத்தது இல்லை....

Tuesday, 19 June 2012

ஏமாற்றம்



உன் தொலைபேசி
அழைப்புக்காக
காத்திருக்கும் எனக்கு
ஏமாற்றங்களே கிடைக்கின்றன.

Saturday, 16 June 2012

என்னுள்ளே



என்னுள் ஏற்பட்ட மாற்றத்துக்கு
காரணமானவன் நீ பிறகு
ஏன் என்னை விட்டு நீங்கிச் சென்றாய்
என்னை எப்போதும்
சந்தோசமாக இருக்க வேண்டும்
என்று சொன்னவனே நீதான்
உன்னாலே வேதனை ஏற்பட்ட பின்பு
எப்படி சந்தோசமாக இருப்பேன்
என்னுள் ஏற்பட்ட சந்தோசம் சோகம்
எல்லாமே நீதான்

Thursday, 14 June 2012

கனவு


உன்னைப் பார்த்த
சந்தோசத்தில்
தவறிவிழுந்தேன்
உறக்கத்தில் இருந்து
எழுந்தவுடன் தான்
புரிந்தது உன்னைக்
கண்டது கனவில் என்று
எப்போதும்; உனைத்தான்
நேரில் கண்டதே இல்லையே
அதிசயம் நடந்துவிட்டதோ
என்று எண்ணி விட்டேன்
சிறிது நேரம்........

Wednesday, 13 June 2012

தடுமாற்றம்





எப்பொழுதும்
உன்னுடன் ஓயாமல்
பேசிய எனக்கு
இன்று பேச
வார்த்தைகள் இன்றி
தடுமாறுகின்றேன்......


 

தப்பு




உன் இறுதி ஊர்வலத்துக்கு
என்னை அனுமதிக்கவில்லை
உன் முகத்தை பார்க்கத்துடித்த
என் இதயத்தின் உணர்வை
புரிந்து கொள்ளவும் இல்லை
நான் அப்படி என்ன தப்பு செய்தேன்
உன்னை மாற்றாளுக்கு கொடுத்ததற்கா?

வலி




உன்னோடு பேசினால்
அழுதுவிடுவேனோ
என்ற பயம்
எனக்கு இருக்கின்றது
ஏனென்றால்
என் இதயத்தைப்போல
கண்களும் வலிகளை தாங்காது......

கண்கள்




என்னை அறியாமலே
என் கண்களில் இருந்து
கண்ணிர்த்துளிகள்
விழுந்தன
ஒரு வேளை
என் இதயம் அழுதது
கண்களுக்கு
தெரிந்து விட்டதோ!!!!!!!

Tuesday, 12 June 2012

அனல்




உன் நினைவின்
தவிப்பை
என்னால் தாங்க
முடியாமல்
இருக்கிறது
அனல்கூட
என்னை இப்படி
எரிக்காது ஆனால்
உன் நினைவுகள்
என்னை பந்தாடுகின்றன ....

மரணம்




எங்கிருந்தாலும்
உன்னுடன்
பேசிக்கொண்டு உன்னை
நினைத்துகொண்டு
தான் இருப்பேன்...
என்றாவது ஒரு நாள்
உன்னுடன் பேசவில்லை
என்றால்
அன்று தான்
என் இறந்த நாள் என்று
நினைத்துக்கொள்....

என் கல்லறைக்கு வந்து பார்
உன் நினைவுகள் எல்லாம்
பூக்களை பூத்து நிற்கும்

புரட்டப்படாத பக்கங்கள்




நீ நிரந்தரமாக
உறங்கச் செல்வாய்
என்று தெரிந்திருந்தால்
உனக்கு முன்பாகவே
நான் உறங்கி இருந்திருப்பேனே...
உன் நினைவுகள்
என்னும் புரட்டப்படாத
பக்கங்களாகவே உள்ளன

Sunday, 10 June 2012

வேதனை






என்னவனே
நீ எனக்கு மட்டும்
சொந்தமானவன்
என்ற எண்ணம் மட்டுமே
இருந்த என் நெஞ்சில்
உன் மணநாள் கேட்டு
சிறகொடிந்த பறவை போல் ஆனேன்
துடித்தது என் இதயம்
நீ பேசாமல் இருக்கும் போது கூட
நான் இந்த வலியை
அனுபவித்தது கிடையாது
மீண்டும் ஒருநாள்
உன்னை பார்க்கும் போது
ஏற்படும் வலியை
எப்படி நான்
தாங்கிகொள்வேன்
எனக்குரிய நீ
மாற்றாளுடன்செல்லும் போது...... 

Saturday, 9 June 2012

காதலித்து பார்




இதுவரைக்கும்
அழவில்லையா நீ
காதலித்து பார்
உண்கண்களும் குளமாகும்.....
அந்த கண்ணீரும்
இனிய உணர்வாகும்.....
இதயமும் இரத்தம் சிந்தும் ...

இதயம்




உன்னை விட்டு
செல்ல வேண்டும் என்று
நினைத்தாலும் அது
அந்த நொடி மட்டுமே தான்
அடுத்த கணம் உன்னையே
தேடுகின்றது என் இதயம்

நினைவுகளுடன்.......



உன்னுடன் பேசாத
ஒவ்வொரு கணங்களும்
எனக்கு நரகமாய் இருந்தாலும்
உன்னை விட்டு நீண்ட
தூரம் செல்கின்றேன்
உன் நினைவுகளுடன்.......

தூரம்


என்னை விட்டு தூரமாக 
செல்வாய் என்று
தெரிந்திருந்தால் 
என்னுடன் வா என்று 
கேட்கும் போதே 
வந்திருப்பேனே....

என்றும் உன்னுடனே



என்னை விட்டு நீ
தற்காலிகமாய் விலகினாய்
ஆனால்
உன்னைவிட்டு நான்
நிரந்தரமாய் விலகிவிட்டேன்
ஆனாலும் என்றும் என் நட்பு
உன்னுடனே இருக்கும்....

விஷம்



எப்போது உன்னுடன்
நான் பேசாமல்
இருந்ததில்லை
இப்போது இருக்கிறேன் என்றால்
உன் வார்த்தைகளின்
ஆழம் புரிந்திருக்கும்
உனக்கு
விசத்தைவிட கொடியது
உன் வார்த்தைகள்....

உன் வார்த்தைகள்




உன்னை விட்டு என்னால்
நீங்கிச் செல்ல முடியவில்லை
ஆனாலும் எதோ என்று
உன்னுடன் சேர தடுக்கிறது
நீ கூறிய வார்த்தைகள்
வண்டுகள் போல
ரிங்காரம் இட்டபடி இருக்கிறது
உன்னுடன் சேர்ந்து விடு என்று
என்மனம் கூறினாலும்
உன் வார்த்தைகள்
முட்களாய் நெருடுகிறது

எதற்காக



வாழ்வில் எப்போது சேர்வோம்
எப்போது பிரிவோம்
என்று யாருக்கும் தெரியாது
நமக்குள் நடந்த பிரிவில்
நொருங்கியது என் மனம்...
என்னை
காயப்படுத்துவதற்கா
மீண்டும் நீ என்னுடன்
சேர நினைக்கிறாய்?

ரணம்


பூப்பறித்தால் முட்கள்
எம்மை ரணப்படுத்தும்
என்று தெரிந்து தான்
பூக்களைப் பறிக்கின்றோம்
காதலும் அதைப்போலத்தான்
தெரியாமல் முட்கள் குத்தினால்
பரவாயில்லை
ஏன் தெரிந்தும்
முட்கள் இருக்கும்
பூவை பறிக்க நினைகிறீர்கள்!

கானலாகிய கனவுகள்


கானலாகிய கனவுகளுடன்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இன்று.......
எத்தனையோ கனவுகள்
எனக்குள்ளே பூத்திருந்தது
அத்தனையும் ஒரு நொடியில்
சிதறி போய் விட்டது
மீண்டும் என் கனவுகள்
துளிர் விட நான்
விரும்பவில்லை....

மனசு


மீண்டும் பேசியவுடன்
எல்லாவற்றையும்
மறந்து உன்னுடன்
பேசுவதற்கு கூட
விரும்பவில்லை நான்
அதை நீயும் புரிந்து கொள்.
உடைந்த கண்ணாடியை
மீண்டும் ஒட்ட முடியதல்லவா?

எதிர்பார்க்காத தருணம்



எதிர்பார்க்காத வார்த்தைகள்
எதிர்பார்க்காத தருணத்தில்
உன்னிடத்தில் இருந்து
நொறுங்கியது என்மனம்
என்பது உனக்கு புரியுமா?

நீங்கிச் சென்றாலும்



கடற்கரை ஓரம்
எத்தனையோ காதல் ஜோடி
நான் மட்டும் தனியாக
இருந்தாலும்
என்னுடன் நி இருப்பது
போன்ற ஒரு உணர்வு
நாம் இருவரும்
சேர்ந்து திரிந்த இடமல்லவா
நீ என்னைவிட்டு
சென்ற போதும்
உன் நினைவுகள்
எனக்கு உன்னை
நினைவு படுத்திக்கொண்டே இருகிறதே!
என் நினைவுகள்
உனக்கு என்னை
நினைவு படுத்துகின்றனவா?

வைராக்கியம்



உன்னை விட்டு
நீங்குவது
என்று முடிவு
செய்த பிறகு
உன் கவிதைகள்
பார்த்தவுடன்
உன்னை விட்டு
நீங்க முடியவில்லை
என்னால்....
சிறு வைராக்கியத்துடன்
தான் இருகின்றேன்
மீண்டும்
உன்னுடன் சேர்ந்து
உன்னை
கஷ்டப்படுத்துவதில்லை
என்பதில்.......

?????



நான் உனக்கு
எடுத்து சொல்லியும்
விளங்காத போது
நாம் சேர்ந்து வாழ்ந்து
என்ன செய்வது?

பயம்




உன்னை விட்டு
பிரிந்து போக முடிவு செய்த பிறகு
நீ சம்பந்தப்பட்ட எதுவுமே
வேண்டாம் எனக்கு
ஏன் உன் நினைவுகள் கூட....
எங்கே மீண்டும் உன்னை
வந்து சேர்ந்து விடுவேனோ என்ற பயம் தான்

மீண்டும் உனக்கு சிறு தொந்தரவுகூட
கொடுக்க கூடாது என்பதில்
உறுதியாய் உள்ளேன் 

நினைவுகள்



உன்னைச் சுற்றி 
இருக்கும் 
நினைவுகள் எல்லாம் 
என்னை உனக்கு 
நினைவுபடுத்திக்
கொண்டு தான் இருக்கும் 
உனக்கு என் நினைவுகள் 
என்னை நினைவு படுத்தினாலும் 
எப்படி உன்னால் 
மட்டும் என்னோடு பேசாமல் 
இருக்க முடிகிறது