Saturday, 7 July 2012

தொடரும்...


நீ என்னை விட்டு செல்லும் போதும்
என்னை மட்டுமே வைத்திருந்தாய் மனதில்..
ஆனால் அன்று பெரிதாக தெரியவில்லை 
நீ கூறிய வார்த்தைகள்
உன்னை நான் பார்ப்பது 
கல்லறையில் என்று ஒரு நாளும் 
நினைத்தது இல்லை....
உனக்காகவே காத்திருந்தேன்
வந்ததோ தொலைபேசியில்
உன் இறந்த செய்தி...
ஒரு கணம் உலகமே ஸ்தம்பித்தது....
அன்று தொடக்கம்
கண்களும் குளமாகியது
இன்று வரை கண்ணீரும் வற்றவில்லை.....
ஒரு தடவை என்றாலும்
கல்லறையில் இருந்து வருவாயோ...

உனை மறக்கவும் முடியவில்லை
நெஞ்சம் எல்லாம் வெடித்துவிடும்
போல இருக்கின்றது...
உனக்காக நான் எழுதிய
முதல் எழுத்துக்கள் இவை...
இத்தனை நாளும்
கண்ணீரிலே கரைந்து போனேன்....
என் கவிதைகளாவது
உன்னிடத்தில் என்னை வந்து
சேர்க்காதா என்ற நப்பாசையில்
எழுதுகின்றேன்.....

உனக்காய் எழுதிய கிறுக்கல்கள்
என் கல்லறை வரை தொடரும்...

0 comments:

Post a Comment