என்னுள் ஏற்பட்ட மாற்றத்துக்கு
காரணமானவன் நீ பிறகு
ஏன் என்னை விட்டு நீங்கிச் சென்றாய்
என்னை எப்போதும்
சந்தோசமாக இருக்க வேண்டும்
என்று சொன்னவனே நீதான்
உன்னாலே வேதனை ஏற்பட்ட பின்பு
எப்படி சந்தோசமாக இருப்பேன்
என்னுள் ஏற்பட்ட சந்தோசம் சோகம்
எல்லாமே நீதான்
உன்னைப் பார்த்த
சந்தோசத்தில்
தவறிவிழுந்தேன்
உறக்கத்தில் இருந்து
எழுந்தவுடன் தான்
புரிந்தது உன்னைக்
கண்டது கனவில் என்று
எப்போதும்; உனைத்தான்
நேரில் கண்டதே இல்லையே
அதிசயம் நடந்துவிட்டதோ
என்று எண்ணி விட்டேன்
சிறிது நேரம்........
உன் இறுதி ஊர்வலத்துக்கு
என்னை அனுமதிக்கவில்லை
உன் முகத்தை பார்க்கத்துடித்த
என் இதயத்தின் உணர்வை
புரிந்து கொள்ளவும் இல்லை
நான் அப்படி என்ன தப்பு செய்தேன்
உன்னை மாற்றாளுக்கு கொடுத்ததற்கா?
எங்கிருந்தாலும்
உன்னுடன்
பேசிக்கொண்டு உன்னை
நினைத்துகொண்டு
தான் இருப்பேன்...
என்றாவது ஒரு நாள்
உன்னுடன் பேசவில்லை
என்றால்
அன்று தான்
என் இறந்த நாள் என்று
நினைத்துக்கொள்....
என் கல்லறைக்கு வந்து பார்
உன் நினைவுகள் எல்லாம்
பூக்களை பூத்து நிற்கும்
நீ நிரந்தரமாக
உறங்கச் செல்வாய்
என்று தெரிந்திருந்தால்
உனக்கு முன்பாகவே
நான் உறங்கி இருந்திருப்பேனே...
உன் நினைவுகள்
என்னும் புரட்டப்படாத
பக்கங்களாகவே உள்ளன
என்னவனே நீ எனக்கு மட்டும் சொந்தமானவன் என்ற எண்ணம் மட்டுமே இருந்த என் நெஞ்சில் உன் மணநாள் கேட்டு சிறகொடிந்த பறவை போல் ஆனேன் துடித்தது என் இதயம் நீ பேசாமல் இருக்கும் போது கூட நான் இந்த வலியை அனுபவித்தது கிடையாது மீண்டும் ஒருநாள் உன்னை பார்க்கும் போது ஏற்படும் வலியை எப்படி நான் தாங்கிகொள்வேன் எனக்குரிய நீ மாற்றாளுடன்செல்லும் போது......
எப்போது உன்னுடன் நான் பேசாமல் இருந்ததில்லை இப்போது இருக்கிறேன் என்றால் உன் வார்த்தைகளின் ஆழம் புரிந்திருக்கும் உனக்கு விசத்தைவிட கொடியது உன் வார்த்தைகள்....
உன்னை விட்டு என்னால் நீங்கிச் செல்ல முடியவில்லை ஆனாலும் எதோ என்று உன்னுடன் சேர தடுக்கிறது நீ கூறிய வார்த்தைகள் வண்டுகள் போல ரிங்காரம் இட்டபடி இருக்கிறது உன்னுடன் சேர்ந்து விடு என்று என்மனம் கூறினாலும் உன் வார்த்தைகள் முட்களாய் நெருடுகிறது
வாழ்வில் எப்போது சேர்வோம் எப்போது பிரிவோம் என்று யாருக்கும் தெரியாது நமக்குள் நடந்த பிரிவில் நொருங்கியது என் மனம்... என்னை காயப்படுத்துவதற்கா மீண்டும் நீ என்னுடன் சேர நினைக்கிறாய்?
பூப்பறித்தால் முட்கள் எம்மை ரணப்படுத்தும் என்று தெரிந்து தான் பூக்களைப் பறிக்கின்றோம் காதலும் அதைப்போலத்தான் தெரியாமல் முட்கள் குத்தினால் பரவாயில்லை ஏன் தெரிந்தும் முட்கள் இருக்கும் பூவை பறிக்க நினைகிறீர்கள்!
கானலாகிய கனவுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன் இன்று....... எத்தனையோ கனவுகள் எனக்குள்ளே பூத்திருந்தது அத்தனையும் ஒரு நொடியில் சிதறி போய் விட்டது மீண்டும் என் கனவுகள் துளிர் விட நான் விரும்பவில்லை....
மீண்டும் பேசியவுடன் எல்லாவற்றையும் மறந்து உன்னுடன் பேசுவதற்கு கூட விரும்பவில்லை நான் அதை நீயும் புரிந்து கொள். உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒட்ட முடியதல்லவா?
உன்னை விட்டு நீங்குவது என்று முடிவு செய்த பிறகு உன் கவிதைகள் பார்த்தவுடன் உன்னை விட்டு நீங்க முடியவில்லை என்னால்.... சிறு வைராக்கியத்துடன் தான் இருகின்றேன் மீண்டும் உன்னுடன் சேர்ந்து உன்னை கஷ்டப்படுத்துவதில்லை என்பதில்.......
உன்னை விட்டு பிரிந்து போக முடிவு செய்த பிறகு நீ சம்பந்தப்பட்ட எதுவுமே வேண்டாம் எனக்கு ஏன் உன் நினைவுகள் கூட.... எங்கே மீண்டும் உன்னை வந்து சேர்ந்து விடுவேனோ என்ற பயம் தான் மீண்டும் உனக்கு சிறு தொந்தரவுகூட கொடுக்க கூடாது என்பதில் உறுதியாய் உள்ளேன்